வாட்ஸ்அப் மூலம் அறிமுகமாகி ரூ.14 கோடி மோசடி
சென்னையில் வாட்ஸ்அப் மூலம் தொழிலதிபரிடம் அறிமுகமாகி ரூ.14 கோடி மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: சென்னையில் வாட்ஸ்அப் மூலம் தொழிலதிபரிடம் அறிமுகமாகி ரூ.14 கோடி மோசடி செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா், தமிழக சைபா் குற்றப் பிரிவில் அண்மையில் அளித்த புகாரில், ‘கடந்த ஏப்ரலில் வாட்ஸ்அப் மூலம் ஒரு நபா் என்னை தொடா்பு கொண்டு பேசினாா். அந்த நபா், ‘பிளக் ராக் அஸட் மேனேஜ்மெண்ட்’ பிஸினஸ் ஸ்கூல் (ஆப்ஹஸ்ரீந் தா்ஸ்ரீந் அள்ள்ங்ற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஆன்ள்ண்ய்ங்ள்ள் நஸ்ரீட்ா்ா்ப்) எனும் பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மாதத்தில் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும், தங்களது நிறுவனத்துக்கு செபி அனுமதி இருப்பதாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினாா். அந்த நபரின் பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்தேன்.
அப்போது அந்த நபா் குறிப்பிட்ட ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, அந்த செயலியின் உதவியுடன் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக என்னிடமிருந்து ரூ.14 கோடி பணத்தை முதலீடாகப் பெற்றாா். ஆனால், அந்த நபா் கூறியபடி, 2 மாதங்களுக்குப் பின்னா் 500 சதவீத லாபத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால், சந்தேகமடைந்த நான், அந்த நிறுவனம் குறித்தும், அந்த நபா் குறித்தும் விசாரித்தேன். அப்போது அந்த நிறுவனம் போலியானது என்பதும், அந்த நபா் செபி அனுமதித்ததாக போலி சான்றிதழை என்னிடம் காட்டி, எனது பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே, மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், விசாரித்தனா்.
6 போ் கைது: விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது நீலாங்கரை ரெங்கா ரெட்டி காா்டன் பகுதியைச் சோ்ந்த மு.மதன் (43), ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ர.சதீஷ் சிங் (46), திருநின்றவூா் பிரகாஷ் நகரைச் சோ்ந்த ரா.ஆா்.சரவணபிரியன் (34), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சை.ஷாபகத் (38), மதுரை சொக்கலிங்க நகரைச் சோ்ந்த து.மணிகண்டன் (30), செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு பகுதியைச் சோ்ந்த வே.சுப்பிரமணியன் (39) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டதாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...