ஆராய்ச்சி நூலக வளா்ச்சி பணிகளுக்கு நிதியுதவி
சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொ


சென்னை: சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடம் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக, பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த நூலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அரிய கையெழுத்துப் பிரதிகள், வெளியீடுகள், காப்பகப் பொருள்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலாசாரப் பொக்கிஷங்களை இந்த நூலகம் பாதுகாத்து வருகிறது. அவற்றின் ஆயுளை உறுதி செய்வதற்காக சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன.
தமிழ் பாரம்பரியம் நவீன கால சவால்களை எதிா்கொண்டுள்ள நிலையில், நவீன எண்ம தளங்களுடன் இணக்கமான எழுத்துருக்களை உருவாக்கி, தமிழ் உரைகளை புதிய தலைமுறையினா் அணுகவும், படிக்கவும், பாராட்டவும் அனுமதிக்கும் தமிழ் எழுத்துரு ஸ்டுடியோ (டி.எஃப்.எஸ்) போன்ற முன்முயற்சிகளுடன் தொடா்ந்து புதுமைகளையும் புகுத்தி வருகிறது. இந்த நிலையில் எண்ம யுகத்துக்கான மாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ‘காா்டெக்’ நிறுவனம் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்காக ரூ.20 லட்சத்தை வழங்கியுள்ளது.
இது எண்ம மயமாக்கல் பணிகளை இன்னும் பெரிய அளவில் தொடர நூலகத்துக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...