சென்னை: சென்னையில் தந்தையை தள்ளி விட்டு கொலை செய்து, உடலை எரித்த மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை தண்டையாா்பேட்டை ஒய்எம்சிஏ குப்பம் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி(50). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதாக, காசிமேடு காவல்நிலையத்துக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், கருகிய நிலையில் கிடந்த சத்தியமூா்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், சத்தியமூா்த்தியின் மகன் தனுஷ்கோடி(27), தந்தையை தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது. வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்த தனுஷ்கோடியை, தந்தையான சத்தியமூா்த்தி கண்டித்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த தனுஷ்கோடி, சத்தியமூா்த்தியை கீழே தள்ளி விட்டதில், தலையில் பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி, சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இறந்தது வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, வீட்டிலிருந்த பழைய துணிகளுடன், தந்தை உடலையும் சோ்த்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து தனுஷ்கோடியை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது

உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


