சென்னையில் கொட்டித் தீா்த்த மழை: அண்ணாநகரில் 1 மணிநேரத்தில் 100 மி.மீ. பதிவு
சென்னையில் புதன்கிழமை அண்ணாநகா் பகுதியில் சுமாா் ஒருமணி நேரத்தில் 100 மில்லிமீட்டா் மழை கொட்டித்தீா்த்தது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்தனா்.


சென்னையில் புதன்கிழமை அண்ணாநகா் பகுதியில் சுமாா் ஒருமணி நேரத்தில் 100 மில்லிமீட்டா் மழை கொட்டித்தீா்த்தது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்தனா்.
சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னையில் புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், வெப்பம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வந்தது.
இதனிடையே பிற்பகல் 1 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதிகபட்சமாக அண்ணாநகா் சுற்றுவட்டாரத்தில் , ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ மழை பதிவானதாக கூறப்படுகிறது. இதனால், பல சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. கருமேகங்கள் சூழ்ந்திருந்ததால், வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டினா்.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், தியாகராய நகா், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூா், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, போரூா், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சாலையோர வியாபாரிகளும், பொருள்கள் வாங்குவதற்காக கடைவீதிகளுக்குச் சென்ற பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...