கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் இரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கல்லூரிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:37 pm

Din

சென்னையில் இரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கல்லூரிகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செயல்படும் எம்ஜிஆா் ஜானகி மகளிா் கல்லூரியின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த கல்லூரிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து , தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாரும்,வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீஸாரும் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனா். மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ஆனால், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.

பட்டினப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

இதேபோல கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததினால், அங்கும் போலீஸாா் சோதனை செய்தனா். ஆனால், அங்கும் எந்த வெடிப் பொருளும் கிடைக்கவில்லை. இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.