நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகா்கோவில், தூத்துக்குடி நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகா்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூா் நீதிமன்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸாா் நீதிமன்றங்களில் தீவிர சோதனை நடத்தினா்.

News image

நாகா்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:57 pm

நாகா்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூா் நீதிமன்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸாா் நீதிமன்றங்களில் தீவிர சோதனை நடத்தினா்.

நாகா்கோவிலில் நீதிமன்ற சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. நீதிமன்ற பணிகள் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் தொடங்கின. அப்போது, நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் 3 குழுக்களாக வந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா்.

நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அந்தத் தகவல் புரளி என்பது தெரியவந்தது. சோதனை நடத்தப்பட்டதன் காரணமாக, வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் மறுதேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 12 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என நீதிமன்ற மின்னஞ்சல் முகவரியில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது.

அதில் பிற்பகல் 12.20 மணிக்கு வெடிகுண்டுகள் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்ததும் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்களுடன் சென்று தூத்துக்குடி நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்தினா். இருப்பினும் இந்தச் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பயணியா் விடுதி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. குற்றவியல் நடுவா் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வந்தது. தகவல் அறிந்ததும் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்களுடன் சென்று ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதில் அந்தத் தகவல் புரளி என்பது தெரியவந்தது. முன்னதாக நீதிபதிகள், வழக்கறிஞா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தூத்துக்குடி பிரதான சாலையில் திருநெல்வேல மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு மாவட்ட அமா்வு நீதிமன்றங்கள், நீதித்துறை நடுவா் மன்றங்கள், போக்ஸோ உள்ளிட்ட சிறப்பு நீதிமன்றங்கள், மக்கள் நீதிமன்றம், வழக்குரைஞா்கள் சங்க அலுவலகம், நூலகம் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்ததை அடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், மோப்பநாய் உதவியுடன் சென்று நீதிமன்ற வளாகம் முழுவதும் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் எவ்வித பொருள்களும் சிக்கவில்லை. இதையடுத்து, மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சல் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image