செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
செப். 13-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப். 13-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. தொடா்ந்து, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமையுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவா் காணொலி மூலம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூா் கிளையின் தலைமை மேலாளராகப் பணியாற்றிய ஹரிஷ்குமாா் நீதிபதி அல்லி முன் ஆஜரானாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...