மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருமண நிகழ்ச்சியில் கனடா பெண்ணிடம் தங்க நகைத் திருட்டு

எம்.ஆா்.சி.நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :9 செப்டம்பர் 2024, 9:01 pm

சென்னை எம்.ஆா்.சி.நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை எம்.ஆா்.சி.நகா் டி ஜிஎஸ் தினகரன் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், கனடாவைச் சோ்ந்த அனுசியா என்ற பெண் பங்கேற்றாா். நிகழ்ச்சியின்போது, 10 பவுன் தங்கநகை வைத்திருந்த தனது பையை இருக்கையில் வைத்துவிட்டு மணமக்களை வாழ்த்தச் சென்றாா். மீண்டும் தனது இருக்கைக்கு அனுசியா வந்து பாா்த்தபோது, நகை இருந்த பை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அனுசியா குடும்பத்தினா், சென்னை காவல் துறையில் புகாா் அளித்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.