சென்னையில் அக்.8-இல் விமானப் படை தின அணிவகுப்பு
நிகழாண்டு விமானப் படை தின அணிவகுப்பு, சென்னையில் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 7:59 pm

நிகழாண்டு விமானப் படை தின அணிவகுப்பு, சென்னையில் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திய விமானப் படையின் 92-ஆவது ஆண்டு தினம், வரும் அக்டோபா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பிரதான அணிவகுப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் விமான படை நிலையத்தில் இந்த அணிவகுப்பு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முக்கியமான ராணுவ நிகழ்ச்சிகளை தில்லியைத் தாண்டி நாட்டின் பிற நகரங்களிலும் நடத்துவது மத்திய பாஜக அரசின் கொள்கையாக உள்ளது. கடந்த ஆண்டு விமானப் படை தின பிரதான அணிவகுப்பு, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...