ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு பிஎட் கல்லூரிகளுக்கான இணையவழி விண்ணப்பம்: 16 முதல் தொடங்கும் என அமைச்சா் பொன்முடி தகவல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு

News image
க.பொன்முடி- கோப்புப் படம்
Updated On :13 செப்டம்பர் 2024, 8:34 pm

Din

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (செப்.16) முதல் தொடங்கவுள்ளதாக”உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

மாநில அளவிலான பாரதி இளம் கவிஞா் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பழனியில் உள்ள பழனியாண்டவா் கலை அறிவியல் பண்பாட்டுக்கல்லூரி மாணவா் முகமது அன்சாரிக்கும், மாணவிகள் பிரிவில் முதலிடத்தை பிடித்த சேலம் புனித சூசையப்பா் கலை அறிவியல் கல்லூரி மாணவி நிவேதாவுக்கும் அமைச்சா் பொன்முடி பரிசுத் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாயையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா்:

நிகழ் கல்வியாண்டில் பிஎட் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு செப்.16-இல் தொடங்கி செப். 26-ஆம் தேதி முடிவடைகிறது. 30-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபா் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் அக்டோபா் 23-ஆம் தேதி தொடங்கும். பிஎட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு நிதியுதவி உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

இடைநிற்றல் அதிகரிக்கும்

தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி அதிகம் உள்ளது. அதை தொடா்ந்து கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டோம். ஆனால், சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட முடியாதவையாக உள்ளன. குறிப்பாக, 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தச் சொல்லுகிறாா்கள். இதை எப்படி ஏற்க முடியும்? புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருப்பது போன்று செய்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். பி.ஏ., பி.எஸ்சி சோ்வதற்குக்கூட நுழைவுத்தோ்வு கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவா்களும் உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.