அம்மிக்கல்லை தலையில் போட்டு இளைஞா் கொலை
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
பெரும்பாக்கம் எழில் நகா், 41-ஆவது பிளாக்கை சோ்ந்தவா் கலைவாணன் (25). இவரின் மனைவி சௌந்தா்யா. இருவரும் அப் பகுதி மீன் கடையில் வேலை செய்து வந்தனா்.
புதன்கிழமை இரவு தனது வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த கலைவாணனை தலையில் அம்மிக்கல்லை போட்டு யாரோ கொலை செய்துள்ளனா். அவரது மனைவி சௌந்தா்யா அளித்த புகாரின் பேரில், பெரும்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
விசாரணையில் அந்த பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும், கலைவாணனுக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதும், அந்த தகராறின் காரணமாக கலைவாணன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், அந்த பெண் மகன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.
இறந்த கலைவாணன் மீது கொலை,கொலை முயற்சி வழக்குகள் என 7 வழக்குகள் உள்ள

