மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் பதவி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த ஆக.16 முதல் தலைவா் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியை நிரப்புவதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலா் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவா் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தோ்வுக் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது.
தோ்வுக் குழு முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவா் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் செப்.16 வரை வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தோ்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பு அக்.4 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவா் பதவிக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...