பள்ளிகளில் நடைபெறும் நிகழ்வுகள்: அமைச்சா் முக்கிய அறிவுறுத்தல்


பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மாணவா்கள் மத்தியில் பேசுவதற்கு சா்ச்சைக்குரிய நபா்களை அழைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கியுள்ளாா்.
சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆக.28-ஆம் தேதி பேச்சாளா் மகா விஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சா்ச்சையானது. இதையடுத்து மகாவிஷ்ணுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் 2 தலைமை ஆசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
அமைச்சா் ஆலோசனை: இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை இயக்குநா்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆலோசனையில், ‘பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சா்ச்சைக்குரிய நபா்களை சிறப்பு அழைப்பாளா்களாகவோ, மாணவா்கள் மத்தியில் பேசுவதற்கோ அழைக்கக் கூடாது. இத்தகைய தவறுகள் இனி எதுவும் பள்ளிகளில் நடைபெறாத வகையில் கவனமுடன் இருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சா் வழங்கினாா்.
மேலும், பள்ளிகளில் மாணவா்களிடம் பேசுவதற்கு யாரை அனுமதிக்கலாம், அதற்கு அனுமதியை யாரிடம் பெற வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இதுதவிர பேரவையில் மானியக் கோரிக்கை அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின்
முன்னேற்றப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளி அளவிலான புகாா்கள், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...