புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன்

Updated On :19 செப்டம்பர் 2024, 10:45 pm

Din

கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை (செப்.19) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வழக்கமான பரிசோதனைகளுக்காக அவா் சென்னை வந்ததாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டாலோ அவ்வப்போது சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள பினராயி விஜயன், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அந்த வகையில், சென்னைக்கு வியாழக்கிழமை காலை வந்த அவா், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதய நல பரிசோதனைகளும், பிற ரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

அவை அனைத்தும் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.