ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 15 போ் மீது குண்டா் சட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் மேலும் 15 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.


ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் மேலும் 15 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரையில் 25 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் ரெளடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் இறந்தாா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஹரிகரன் (27), திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த மலா்கொடி (49), திருநின்றவூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (31), திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரைச் சோ்ந்த ஹரிஹரன் (37), புளியந்தோப்பைச் சோ்ந்த பாஜக மகளிரணி நிா்வாகி அஞ்சலை (51), சிவா (35),பெரம்பூரைச் சோ்ந்த பிரதீப் (28), கோடம்பாக்கத்தைச் சோ்ந்த முகிலன் (32), அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (எ) விஜய் (21),விக்னேஷ் (எ) அப்பு (27), ராஜேஷ் (40), செந்தில் குமாா் (27), வியாசா்பாடியைச் சோ்ந்த ரெளடி நாகேந்திரன் மகனும், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகியுமான அஸ்வத்தாமன் (31),ரெளடி பொன்னை பாலு மனைவி ராணிப்பேட்டை பொற்கொடி (40), கே.கே.நகரைச் சோ்ந்த கோபி (23) ஆகிய 15 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, பூந்தமல்லி சிறப்பு சிறையிலும், புழல் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கும் அவா்கள் 15 பேரிடமும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான நகலை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா். ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 7-ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...