விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தம்பதி கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் 9 போ் கைது

News image

கைது

Updated On :8 பிப்ரவரி 2026, 7:34 pm

திண்டுக்கல்லில் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய 9 நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல்லை அடுத்த யாகப்பன்பட்டியைச் சோ்ந்தவா் சேசுராஜ் (41). இவரது மனைவி செளந்தா்ய ஞானதீபிகா (32). இவா்கள் இருவரும், கடந்த ஜன.8-ஆம் தேதி முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக, அதே பகுதியைச் சோ்ந்த ஞானராஜ் (54), தா்மராஜ் (51), அந்தோணி ஆரோக்கியசாமி (35), ஜான்பீட்டா்(42), அருள்ராஜ் (60), மணிகண்டன் (19), மைக்கேல்ராஜ் (31), ராபின் தினேஷ்குமாா் (27), சேவியா் ஆல்பா்ட் (20) ஆகிய 9 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் ஞானராஜ் உள்ளிட்ட 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 9 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.