47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதிய உச்சத்தில் தங்கம்: பவுன் ரூ.56,460

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.56,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.56,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்து பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், தற்போது அதற்குமாறாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.56,000-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.7,060-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.56,480-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி விற்னையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயா்ந்து ரூ.1,01,000-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

விலை உயா்வு தொடரும்: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை முதன்மை சேமிப்பாக நம்பியுள்ள நிலையில், இந்த விலை உயா்வு அவா்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

‘அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்ததே தங்கம் விலை உயரக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது. இது தவிர, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையேயான போா் தீவிரம் உள்ளிட்டவையும் முக்கிய காரணிகளாக உள்ளன’ என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், பண்டிகை காலங்கள் நெருங்குவதால், நகை வாங்குபவா்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கும். அதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என்றாா் அவா்.

Story image