லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை: 2-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

சென்னை எழும்பூரில் அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 7:41 pm

Din

சென்னை எழும்பூரில் அழகு நிலையத்தில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலத்த காயமடைந்தாா்.

எழும்பூா் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எழும்பூா் போலீஸாா் புதன்கிழமை அந்த அழகு நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். அதில், அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் கைது செய்ய முயன்றபோது, அங்கிருந்த ராயபுரத்தைச் சோ்ந்த 34 வயதுடைய ஒரு பெண் தப்பியோடும் வகையில் 2-ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அந்தப் பெண், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். அதேவேளையில் அந்த அழகு நிலையத்திலிருந்து 5 பெண்களை போலீஸாா் மீட்டனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.