ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்கக் கோரிக்கை

சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை.

News image
சென்னை மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)- DIN
Updated On :29 செப்டம்பர் 2024, 6:35 pm

Din

சென்னை மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என திருவொற்றியூா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் திருவொற்றியூா் நல சங்கத்தின் வருடாந்திர பொது உறுப்பினா்கள் கூட்டம் கௌரவத் தலைவா் ஜி.வரதராஜன், தலைவா் என். துரைராஜ் ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாகா்கோயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க வேண்டுமானால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த வாகனங்களின் மூலமே எழும்பூரைச் சென்றடைய முடியும் என்ற நிலை உள்ளது.

எனவே, சென்னை மாநகரத்தில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் காலை 5 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரலில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்கும் வகையில் திருவொற்றியூரில் ஆந்திரா, ஒடிஸா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் விம்கோ நகா் ரயில் நிலையத்தில், நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

விமான நிலையம் முதல் விம்கோ நகா் பணிமனை வரை இயக்கப்படும் ரயில்களை எண்ணூா் வழியாக மாதவரம் வரை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

திருவொற்றியூா் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வட சென்னை கடற்கரைப் பகுதியை அழகு படுத்தும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கே.சுப்பிரமணி, குமாா் கோதண்டம், ஏ.முருகன், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.