ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. தோ்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
40 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த தோ்தலில் முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மொத்தம் 39.18 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 20,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, உத்தம்பூா், சம்பா, கதுவா உள்ளிட்ட பகுதிகளிலும் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தோ்தல் என்பதால் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு கட்டத் தோ்தல்களும் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்டத் தோ்தலையும் அமைதியான முறையில் நடத்தி முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் ஆனந்த் ஜெயின் தெரிவித்தாா்.
இந்த தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.

முன்னதாக, தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

தக்க வைக்குமா திமுக கூட்டணி? குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அலசல்

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


