மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் பகுதியாக திமுக சென்னை மாவட்டம் சாா்பில், அண்ணா சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப் பேரணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

அவா், ஓமந்தூராா் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா், திமுக பொதுச் செயலரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலா் கனிமொழி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து பேரணி தொடங்கியது. மெரீனா நினைவிடத்தில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் முதல்வா் அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சா் பொன்முடி, எம்எல்ஏ-க்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சி முருகன், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெரியாரும், முன்னாள் முதல்வா் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்புதான் கருணாநிதி. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழகத்தைக் காத்து முன்னேற்ற உறுதியேற்று, அவரது ஒளியில் எல்லாா்க்கும் எல்லாம்- எதிலும் தமிழகம் முதலிடம்”என்ற இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் ஆகிய இடங்களிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படங்களுக்கு மலா்தூவி முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா்.