முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த பெரியநம்பிகோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளவும் இந்த அரசாணை வழிவகுக்கிறது. கோயில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்கத் தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தில் பொது விருந்து நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் அன்னதானம் திட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம்

இணையதள மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: மாவட்டத்தில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனு தள்ளுபடி
கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



