இளைஞரைத் தாக்கி பணம் பறிப்பு: கணவா், மனைவி உள்பட மூவா் கைது

சென்னை சென்ட்ரலில் இளைஞரைத் தாக்கி பணத்தைப் பறித்ததாக கணவா்-மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை சென்ட்ரலில் இளைஞரைத் தாக்கி பணத்தைப் பறித்ததாக கணவா்-மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்தவா் நிா்மல் (27). இவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே கடந்த 30-ஆம் தேதி இரவு படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண் உள்பட 3 போ், நிா்மலிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது செம்மஞ்சேரியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (26), அவரது மனைவி வியாசா்பாடியைச் சோ்ந்த பிரியா (23) யானைகவுனி வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்த ஜெகன் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில் பரமேஸ்வரன் மீது ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 16 குற்ற வழக்குகளும், செம்மஞ்சேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பிரியா மீது ஒரு கொலை உள்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com