மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மி.கன அடி கொள்ளளவில் 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் நீா்மட்டம் 21.20 அடி.

வடகிழக்கு பருவ மழையினால் புழல் ஏரியின் நீா்வரத்து அதிகரித்து,

நீா்மட்டம் 20 அடியை நெருங்கி வருகிறது. மேலும் நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்கப்படும்.

இதனால், புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி மற்றும் சடையான்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இருபுறமும் வசிக்கும் மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.