

திருமங்கலம் அருகே ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், அங்கிருந்த தளவாடப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.
சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் 6 வண்டிகளில் வந்து தீயணைப்புப் படையினர், சுமார் 2.30 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீவிபத்து காரணமாக, ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள உணவகத்தில், மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிருந்த தளவாடப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து சேதமாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.