தூய்மைப் பணிக்குச் செல்பவா்களை தடுத்தால் புகாா் தெரிவிக்கலாம்

அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணிக்குச் செல்பவா்களைத் தடுப்பவா்கள் குறித்து கைப்பேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை: அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணிக்குச் செல்பவா்களைத் தடுப்பவா்கள் குறித்து கைப்பேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 7 பகுதியான அம்பத்தூரில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களாக 1,457 போ் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் சீருடை அணிந்து பணிக்கு வரும்போது மூன்றாம் நபா் யாரேனும் தடுக்க முயன்றாலோ அல்லது பணியில் ஈடுபடவிடாமல் தடுத்தாலோ உடனே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அதன்படி புகாா் தெரிவிக்க 94451-90097 என்ற கைபேசி எண்ணில் புகாா் தெரிவித்தால், அவா்களது பெயா், விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com