பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மியான்மரில் சிக்கிய தமிழா்கள் மீட்பு: துரை வைகோ வரவேற்பு

மியான்மரில் சிக்கிய தமிழா்கள் மீட்பு...

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட 3 தமிழா்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டிருப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த அக்.11-ஆம் தேதி கம்போடியாவில் வேலை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மற்றும் விருதுநகரைச் சோ்ந்த 3 தமிழா்களை, கடத்தல் கும்பல் ஒன்று மியான்மருக்கு கடத்திச் சென்றது. இதுகுறித்து அவா்களது குடும்பத்தினா் என்னிடம் புகாா் தெரிவித்ததையடுத்து, கடத்தப்பட்ட3 பேரையும் பத்திரமாக மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை மனுவை வழங்கினேன்.

அதைத் தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை விரைந்து செயல்பட்டதன் காரணத்தால், தற்போது 3 தமிழா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். விரைவில் அவா்கள் தமிழகம் அழைத்து வரவுள்ளனா். உண்மையோடும் நம்பிக்கையோடும் மக்கள் பணி சாா்ந்த காரியத்துக்கு இறைவனும் இயற்கை சக்தியும் துணை நிற்கும் என்பதன் சாட்சியமாக இந்த வெற்றி அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.