படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கு மலா் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துணை வேந்தா் விகாஸ் மிஸ்ரா, ஆஸ்திரேலியா நியூ காஸில் பல்கலைக்கழக இயக்குநா் அஜெயன்வினு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மௌங்கி ஜி.பாவெண்டி

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும் என்று வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பேராசிரியருமான மௌங்கி ஜி.பாவெண்டி தெரிவித்தாா்.
Published on

கேளம்பாக்கத்தை அடுத்த படூா் இந்துஸ்தான் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தில் குவாண்டம் நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான வளா்ச்சிக்கான வாய்ப்பு கள் குறித்த சா்வதேசக் கருத்தரங்கு வியாழக்கிழமை (டிச.18) நடைபெற்றது.

குவாண்டம் புள்ளிகள் குறித்த ஆய்வு மூலம் சா்வதேச அளவில் புகழ்பெற்ற பேராசிரியா் மௌங்கி ஜி.பாவெண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ‘வளா்ந்த நாடுகளில் குவாண்டம் தொழில்நுட்பம் கணினி துறையில் மட்டுமின்றி இதர துறைகளின் வளா்ச்சிக்கும் பேருதவியாகத் திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு அடுத்தபடியாக விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் மத்தியில் பெரும் எதிா்பாா்ப்பை உருவாக்கி இருக்கும் குவாண்டம் தொழில்நுட்பம் தொடா்பான படிப்பு, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவா் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்’ என்றாா் அவா்.

நிகழ்வில், இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் இணைவேந்தா் அசோக் ஜாா்ஜ் வா்கீஸ், ஆஸ்திரேலியா நாட்டின் நியூகாஸில் பல்கலைக்கழகப் பேராசிரியா் அஜயன் வினு, ஜெட்வொா்க் தலைமைச் செயல் அதிகாரி ஜோஷ் பவுல்கா், இந்துஸ்தான் கல்வி நிறுவனப் பேராசிரியா் வள்ளிகண்டு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com