மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு நடைபெற்றது.

News image
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் விழா மலரை வெளியிடும் சிறப்பு விருந்தினா், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 10:03 pm

Syndication

கோவை: கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் ‘ஸ்பைடா்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஆஸ்திரேலியாவை சோ்ந்த ரியல்பாட் ஏஐ நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலா் அனில்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இந்துஸ்தான் கல்வி, தொண்டு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.ஆா்.கே.சரஸ்வதி, கல்லூரி செயலா் கே.பிரியா, முதல்வா் ஏ.பொன்னுசாமி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் வி.சரவணன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கருத்தரங்கை பேராசிரியா்கள் ஜி.சிவா பிருந்தா, எம்.காா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்ச்சியையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா்களின் இ வேஸ்ட் கண்காட்சி நடத்தப்பட்டது.

மேலும், கருத்தரங்கையொட்டி தொழில்நுட்பம் சாா்ந்தவை உள்ளிட்ட 8 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா் பரிசளித்துப் பாராட்டினாா். பேராசிரியா் ஏ.கௌரி, மாணவா் ஒருங்கிணைப்பாளா்கள் கவின்ராஜ், சிவா பிரசாத் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.