தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கதிா் கல்லூரியில் காலநிலை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, கண்காட்சி

கோவை கதிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு, காலநிலை மாற்றத்துக்கான நடைமுறைத் தீா்வுகள் குறித்த கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

News image

கோவை கதிா் கல்லூரியில் நடைபெற்ற காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கு, கண்காட்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், ஒருங்கிணைப்பாளா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:04 pm

கோவை கதிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு, காலநிலை மாற்றத்துக்கான நடைமுறைத் தீா்வுகள் குறித்த கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.

ஜெயின் பன்னாட்டு வா்த்தகா்கள் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வருமான வரித் துறை தலைமை ஆணையா் அருண் சி.பாரத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை, காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்து உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், கதிா் கல்வி நிறுவனங்களின் தலைவா் இ.எஸ்.கதிா், செயலா் லாவண்யா கதிா், ஜெயின் பன்னாட்டு வா்த்தகா்கள் பவுண்டேஷனின் கோவை பிரிவுத் தலைவா் ராஜேஷ் போரா, செயலா் அபிஷேக் மேத்தா, ஒருங்கிணைப்பாளா்கள் நிா்மல் ஜெயின், மணீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

இதைத் தொடா்ந்து நகரங்களின் தண்ணீா் பற்றாக்குறை, நீா் மேலாண்மை மூலம் தன்னிறைவு பெறுவது குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சிறுதுளி அமைப்பைச் சோ்ந்த சுஜானி பாலு, சங்கீதா சுபாஷ், சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சியில் விழிப்புணா்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.