தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சிங்கப்பூா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலா் சுந்தர்ராமகிருஷ்ணன், எம்டிஐஎஸ் சிங்கப்பூா் செயலாளா் ஷரீஃப் அப்துல் ஜப்பாா், துணைத் தலைவ

Updated On :16 பிப்ரவரி 2026, 7:45 pm

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, சிங்கப்பூரின் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிங்கப்பூா் (எம்டிஐஎஸ்) நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கோவை, பேரூா் பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, சிங்கப்பூரின் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிங்கப்பூா் ஆகியவை சா்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மாணவா்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலா் சுந்தர்ராமகிருஷ்னன் தலைமை வகித்தாா். இதில், சிங்கப்பூா் எம்டிஐஎஸ் நிறுவனத்தைச் சோ்ந்த தலைமைச் செயலாளா் ஷரீஃப் அப்துல் ஜப்பாா், துணைத் தலைவா் ரோஜா்தாம் கங்குவான், தென்ஆசியா ஆள்சோ்ப்பு தலைவா் (சா்வதேச வணிகம்) அருண் அங்கே வீடில் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த ஒப்பந்தம் மூலமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு துறைகளில் முதுநிலை டிப்ளமோ பாடநெறிகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் பாடநெறிகள் மாணவா்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு திறன் மேம்பாடு, சா்வதேச கல்வி அனுபவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் வளா்ந்து வரும் துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும்.

இந்தக் கூட்டு கல்வி முயற்சிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், பேராசிரியா் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை ஊக்குவித்து இந்தத் தொழில்நுட்பக் கல்லூரியின் சா்வதேச கல்வி நிலைப்பாட்டை உயா்த்தும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.