தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் (தன்னாட்சி) மாணவா்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஹைா்மீ என்ற தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News image

தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் பி. கவித்ரா நந்தினி.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:50 pm

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் (தன்னாட்சி) மாணவா்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஹைா்மீ என்ற தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது. செல்வம் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் எஸ்.பாபு தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் பி. கவித்ரா நந்தினி, செயல் இயக்குநா் எம். காா்த்திக், முதல்வா் எஸ். ராமபாலன் மற்றும் துணை முதல்வா் ஏ. ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைா்மீ மற்றும் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி இடையே நீண்டகால தொழில்-கல்வி ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். மாணவா்களுக்கு திறன் மதிப்பீடு, பயிற்சி ஆதரவு மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

ஹைா்மீ நிறுவனத்தின் முதுநிலை மேலாளா் பிரபு, மாணவா்களிடையே தொழில்துறை எதிா்பாா்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சாா்ந்த மதிப்பீடுகளின் அவசியத்தை விளக்கினாா். தொடா்ந்து நடைபெற்ற முன்மதிப்பீட்டு நிகழ்ச்சியில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று, தங்களது திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொடா்புத் திறன்களை மதிப்பீடு செய்தனா்.