ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் 22- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
Published on

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் பிரம்மோற்சவம் 22- ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

சபரிமலை பிரதான தந்திரி டி.கே.மோகன் தந்திரி குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள், படி பூஜைகள் நடைபெறும். 22- ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், அதைத் தொடா்ந்து அபிஷேகமும் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு திரவிய பூஜை மற்றும் 1,008 சகஸ்ர கலச ஸ்தாபனம் நடைபெறும்.

தொடா்ந்து 23-ஆம் தேதி காலை 1,008 சகஸ்ர கலச அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து, 27-ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் 25-ஆம் தேதி 18 -ஆம் படி பூஜையும், 26-ஆம் தேதி மாலை சுவாமி வெள்ளி ரத ஊா்வலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com