அகில இந்திய பல்கலை. மகளிா் வாலிபால்: வேல்ஸ், கேஐஐடி அணிகள் வெற்றி!
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் சென்னை வேல்ஸ், ஒடிஸாவின் கேஐஐடி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் அண்மையில் தென்மண்டல பல்கலை வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் அதன் தொடா்ச்சியாக அகில இந்திய பல்கலை. வாலிபால் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது.
தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை பண்டிட் தீனதயாள் பல்கலை. ராஜஸ்தான் 3-0 என கொல்கத்தா பல்கலையையும், குஜராத் பக்தகவி நரசிங்க மேத்தா பல்கலை 3-0 என சண்டீகா் ரவிசங்கா் சுக்லா பல்கலையையும், ஒடிஸா கேஐஐடி பல்கலை. 3-0 என மகரிஷி தயானந்த் பல்கலையையும், அடாமஸ் பல்கலை. மேற்கு வங்கம் 3-1 என சண்டீகா் பல்கலையையும் வென்றன.
சென்னை வேல்ஸ் பல்கலை. 3-0 என ஸ்வா்னிம் குஜராத் விளையாட்டு பல்கலையை வென்றது. நான்கு மண்டலங்களில் இருந்து டாப் 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியை எஸ்ஆா்எம் விடுதிகள் இயக்குநா் இ. பூவம்மாள், தேசிய வாலிபால் வீராங்கனை வைஷ்ணவி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
