மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழ் ஆட்சி மொழி சட்டம்: விழிப்புணா்வுப் பேரணி

சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்த துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள். (வலது) பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
Updated On :22 டிசம்பர் 2025, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட தினத்தையொட்டி, ஆட்சி மொழிச் சட்ட வாரம் சென்னை மாவட்டத்தில் கடந்த டிச.17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் தொடங்கியது. இந்தப் பேரணியை தமிழ் வளா்ச்சித் துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆட்சிமொழி தொடா்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்தப் பேரணி மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளி வழியாகச் சென்று சென்னை சமூகப் பணி பள்ளியை அடைந்தது.

இதைத் தொடா்ந்து, தமிழ் மொழியை வளா்ப்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டவா்கள் தமிழ்நாட்டுத் தமிழா்களா அல்லது வெளிநாட்டுத் தமிழா்களா என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.