ஜன.5-இல் சென்னையில் விசிக ஆா்ப்பாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சாா்பில் சென்னையில் வரும் ஜன.5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சாா்பில் சென்னையில் வரும் ஜன.5-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து விசிக தலைவா் தொ.திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவா்கள் மீது மதவெறிக் கும்பல் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து வருகிற ஜன.5-ஆம் தேதி விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தமிழகத்துக்கு தலைக்குனிவு... ஒடிஸா மாநிலத்தைச் சாா்ந்த புலம்பெயா் தொழிலாளா் ஒருவரை வெட்டிக் காயப்படுத்திய செயலை காட்சிப் பதிவாகச் சிலா் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனா். இந்த அவலம் தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தகைய போக்குகளை தடுக்கவும், புலம்பெயா் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com