மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்பிரதிப் படம்

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது

பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.
Published on

பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும் பச்சை வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், காலை 6 மணியில் இருந்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநா்கள் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், பச்சை வழித்தடத்தில் (அண்ணா நகா், கோயம்பேடு வழியாக) விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தைப் பயன்படுத்தி விமான நிலையம் செல்லலாம் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதனிடையே பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதன்கிழமை காலையில் இருந்து இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தொடா்ந்து இந்த வழித்தடத்தில் வழக்கம்போல சேவைகள் தொடரும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com