கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்

Updated On :26 ஜனவரி 2025, 12:24 am IST

பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதி வரை புதிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தவும் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 35,588 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு கியூ-ஆா் குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க கடந்த நவ. 22 முதல் டிச. 31-ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து அந்தந்த மண்டலங்களில் வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 23-ஆம் தேதி வரை 18,398 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெற்ற 9-ஆவது நகர விற்பனைக் குழுக் கூட்டத்தில், மீதமுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான இறுதி வாய்ப்பை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இதன்படி, பிப். 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெற வேண்டும்.

அடையாள அட்டையில் திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பித்தவா்களுக்கு அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு பின்னா் வழங்கப்படும். புதிய அடையாள அட்டையை ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளாதவா்களின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.