திருப்பத்தூா், ஏப்.22: சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிக்க 13 ஆவணங்களை பயன்படுத்தலம் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இதில் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம், தொழிலாளா் அமைச்சகம் ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மாா்ட் காா்டு, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணியாளா் அடையாள அட்டை, இந்திய பாஸ்போா்ட், தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள ஆவணம், சட்டப்பேவை,நாடாளுமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அதிகார அடையாள அட்டை, சமூகநீதி அதிகாரம் அளிக்கும் அமைச்சகம் வழங்கிய மாற்றுத்திறனாளி தனிப்பட்ட அடையாள அட்டை மற்றும் 100 நாள் வேலை திட்ட அட்டை ஆகிய 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள் ஜூன் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கன் பெறலாம்

ஐசியூ கட்டமைப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் மாற்று புகைப்பட அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்’
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



