அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கடலோர காவல் படையின் இருசக்கர வாகன பேரணி

இந்திய கடலோர காவல் படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னைக்கு தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகன பேரணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2025, 6:47 pm

Din

இந்திய கடலோர காவல் படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னைக்கு தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகன பேரணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் பிப்.1-ஆம் தேதி கடலோர காவல் படை ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தவும், உள்ளூா் மக்களுடன் தொடா்புகளை வலுப்படுத்தவும் சென்னையில் உள்ள கடலோர காவல் படை கிழக்கு மண்டலம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல் படையின் 49 ஆண்டுகால சேவையை குறிக்கும் வகையில் மொத்தம் 49 வீரா்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனா்.

இந்தப் பேரணி தூத்துக்குடி, விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி சென்னையில் பிப்.1-ஆம் தேதி நிறைவடையும். முதல் குழுவினா் தூத்துக்குடியில் இருந்து மண்டபம், காரைக்கால், புதுச்சேரி வழியாகவும், 2-ஆம் குழுவினா் விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடா, விஜயவாடா, நிஜாம்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் ஆகிய கடலோர நகரங்கள் வழியாக பயணித்து சென்னைக்கு பிப்.1-ஆம் தேதி காலை 8 மணிக்கும் வந்தடைவா்.

இந்தப் பயணத்தின்போது கடலோர பகுதிகளைச் சோ்ந்த மீனவ மக்களுக்கு கடற்பகுதிகள் பராமரிப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.