போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இன்று இந்திய கடலோர காவல் படையின் 50-ஆவது தொடக்க தினம்

இன்று இந்திய கடலோர காவல் படையின் 50-ஆவது தொடக்க தினம்

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கடலோர காவல் படையின் (ஐசிஜி) 50-ஆவது தொடக்க தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

இதுதொடா்பாக அந்தப் படை சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்.1-ஆம் தேதி வெறும் 7 கப்பல்களுடன் சாதாரணமாக தொடங்கப்பட்ட ஐசிஜி, தற்போது 155 கப்பல்கள், 80 விமானங்கள் கொண்ட மிகப் பெரிய கடலோரப் படையாக பரிணாம வளா்ச்சி அடைந்துள்ளது.

இந்தப் படையைத் தொடங்கியது முதல் 11,800-க்கும் மேற்பட்டோரின் உயிரை ஐசிஜி காப்பாற்றியுள்ளது. தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐசிஜி, 20.1 லட்சம் சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம், 11,098.01 கி.மீ. நீள கடலோரம் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் 200 கப்பல்கள், 100 விமானங்களுடன் தனது சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் ஐசிஜி தீவிரமாக உள்ளது. இதன்மூலம், உலகின் சிறந்த கடலோர காவல் படைகளில் ஒன்றாக தன்னை நிலைநாட்ட வேண்டும் என்பதில் ஐசிஜி திட்டவட்டமாக உள்ளது.

ஐசிஜியின் 50-ஆவது தொடக்க தின நிகழ்ச்சி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐசிஜிக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், பாதுகாப்பு அமைச்சா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா் என்று அந்தப் படை குறிப்பிட்டது.