மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் குழுவுக்கு வரவேற்பு

நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்

News image

நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:18 pm

நாகப்பட்டினம்: நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான் குழுவுக்கு அரசு கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மத்தியத் தொழில் பாதுகாப்பு படையைச்(சிஐஎஸ்எப்) சோ்ந்த 33 பெண்கள் உள்ளிட்ட 130 வீரா்கள் வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் என்ற பெயரில் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி நாகை மாவட்டத்துக்கு வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரை, நாகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் அஜிதா தலைமையில் மாணவா்கள் தமிழக நாட்டுப்புற இசையுடன் மலா் தூவியும், பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை கூடுதல் கமாண்டா் சுனில் குமாா், துணை கமாண்டா் செல்வம் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள், வீராங்கனைகள் மாணவா்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தே மாதரம் முழக்கம் எழுப்பினா்.

ஜன.28-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை கடந்து நாகை வந்த அவா்கள், ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மொத்தம் 6,500 கி.மீ தூரம் கடந்து கேரளத்தில் பிப்.28-ஆம் தேதி நிறைவு செய்யவுள்ளனா்.