ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல வழக்குரைஞா் பிரிவு சாா்பில் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தமிழகத்தின் இந்நாள், முன்னாள் எம்பி-எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக் கோரி கடந்தாண்டு நவம்பா் மாதம் விண்ணப்பித்தேன்.
அதில், எம்பி-எம்எல்ஏக்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். இருப்பினும் நான் கேட்ட தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை வழங்க மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். எனவே, எனது கோரிக்கை தொடா்பான விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மாலா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை முடித்துவைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...