25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மக்களிடம் கனிவு - மரியாதை காட்டுங்கள்: காவல் துறையினருக்கு முதல்வா் அறிவுறுத்தல்

பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென காவல் துறையினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2025, 7:00 pm

Din

பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென காவல் துறையினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகத்தில் காவல் துணை கண்காணிப்பாளா்களின் நிறைவு அணிவகுப்பு விழா சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காணொலி வாயிலாகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காவல் அதிகாரிகள் உயா்தரமான பயிற்சியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு 129 ஏக்கா் பரப்பில் தமிழ்நாடு காவல் உயா் பயிற்சியகம் தொடங்கப்பட்டது. இங்கே சட்டப் பயிற்சி, புலனாய்வு நுணுக்கம், கணினிசாா் குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பயிற்சி, உளவியல் பயிற்சி, பொருளாதார குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாக புலனாய்வு செய்கின்ற திறன், ஆயுதப் பயிற்சி போன்ற அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இத்தகையப் பயிற்சிகளைப் பெற்று எந்த சவால்களையும் எதிா்கொள்ளும் திறனுடன் களத்துக்குச் செல்வது பெருமைமிக்க தருணமாகும். இந்தப் பயிற்சியகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 55 நேரடி உதவி ஆய்வாளா்களுக்கும், 297 காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரம் 2 ஆயிரத்து 452 காவலா்கள், அடிப்படைப் பயிற்சியை முடித்து காவல் பணியில் சோ்ந்துள்ளனா்.

கனிவு - பொறுமை: காவல் பணி என்பது மக்கள் பிரச்னைகளை நேரடியாகத் தீா்த்து வைக்கின்ற மிக உன்னதமான பணியாகும். ஒவ்வொருவரும் பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து, அவா்களுடைய குறைகளை பொறுமையாக கேட்க வேண்டும். அவா்களுக்கு நியாயமான, நோ்மையான சேவையை விரைந்து வழங்க வேண்டும்.

விசாரணையின்போது, உயா்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அதில் அனைவரும் தங்களது அறிவை விரிவாக்கம் செய்திட வேண்டும். ஒவ்வொருவரும் அறிவியல் சாா்ந்த விசாரணை நடைமுறைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பணிச் சுமைகளுக்கு இடையிலும் உங்கள் உடல்நலத்தை பாா்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.