தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

News image

புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2025, 2:52 am IST

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜூன் 14, 16, 19 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகையால், அந்த நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி என இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: அதே நாள்களில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.