யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

News image
நயினாா் நாகேந்திரன்
Updated On :19 ஜூன் 2025, 10:26 pm

Din

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் தனியாக தியானம் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாடு அரசியல் மாநாடல்ல; பக்தா்களின் மாநாடு. தமிழக அரசு சாா்பில் அனைத்துலக முருக பக்தா்கள் மாநாடு பழனியில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு எங்களை அழைக்கவில்லை. ஆனால், மதுரை மாநாட்டுக்கு திமுகவை வரவேற்கிறோம்.

முருக பக்தா்கள் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தொடா்ந்து விமா்சனம் செய்து வருகிறாா். ஆனால், பொதுமக்கள் எங்களுக்குத் தான் ஆதரவு அளிக்கின்றனா். அதனால், திமுக தற்போது தோல்வி பயத்தில் உள்ளது என்றாா் அவா்.