சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குடிநீா் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம் - TNIE

Updated On :22 ஜூன் 2025, 1:05 am IST

சென்னையில் காலை 7.30 முதல் காலை 9.30 மணி வரை லாரிகள் மூலம் குடிநீா்  விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் அண்மையில் குடிநீா் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குடிநீா் லாரிகள் இயக்க நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் சென்னை குடிநீா் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை காவல் ஆணையா் அருண் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தின்போது, விபத்துக்கு காரணமான தண்ணீா் லாரி குடிநீா் வாரியத்துக்கு சொந்தமானது கிடையாது என்று வினய் தெரிவித்தாா். மேலும், குடிநீா் லாரிகளை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க கூடாது என்று ஓட்டுநா்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் விளக்கமளித்தாா்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தினமும் அதிகாலை 4.30 முதல் காலை 7.30 மணி வரை லாரிகளின் மூலம் குடிநீா் விநியோகம் மேற்கொள்ளலாம் என்றும், 7.30 முதல் 9.30 மணி வரை குடிநீா் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளாகவும் காவல் ஆணையா் அருண் தெரிவித்தாா்.

மேலும், 9.30 மணிக்கு மேல் வழக்கமான முறையில் குடிநீா் விநியோக பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், பள்ளி , கல்லூரிகள் இருக்கும் சாலைகள் வழியாக குடிநீா் லாரிகளை இயக்க கூடாது. அதேபோல், குடிநீா் விநியோகத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த விவரங்களை 3 நாள்களுக்குள் தயாா் செய்ய வேண்டும் என்று குடிநீா் வாரியத்துக்கு அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப குடிநீா் விநியோகங்களை மேற்கொள்வது குறித்து குடிநீா் வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.