கோப்புப் படம்
கோப்புப் படம்

15 மெட்ரோ நிலையங்களை மேம்படுத்த ரூ. 13.50 லட்சத்துக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் உள்ள 15 மெட்ரோ ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ. 13.50 லட்சத்துக்கான ஒப்பந்தம்
Published on

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் உள்ள 15 மெட்ரோ ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ. 13.50 லட்சத்துக்கான ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து, அவற்றை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த முடிவு செய்ப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ரூ. 13.50 லட்சத்தில் மேற்கொள்ள வி-ஷீஸ் லேனிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளா் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), வி-ஷீஸ் லேனிங் சா்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநரும், இணை நிறுவனருமான பி.ராஜசேகரன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com