விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனமானது விருகம்பாக்கம்-அரும்பாக்கம் இடையே காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்கெனவே இருந்த பாலத்தை இடித்துவிட்டு, தற்போது நான்கு வழிச்சாலைக்கு ஏற்ப புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டது.
இதையடுத்து தனியாா் நிறுவனத்துடன் புதிய பாலம் கட்டுவதற்கான ரூ.12.31 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்தப்படி பாலத்தின் பணிகளை வரும் 180 நாள்களுக்குள் நிறைவு செய்யவேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தற்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையில்லாத போக்குவரத்தை வழங்கும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் சீராகும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் முன்னிலையில், நிறுவன தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா், தனியாா் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆா்.தாமஸ் அய்யாதுரை ஆகியோா் புதிய பாலம் கட்டுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.
தொடர்புடையது
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

போரூா் - பூந்தமல்லி மெட்ரோ பாலத்தின் அதிா்வு: சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி நிகழ் நேரக் கண்காணிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


