சென்னை: சென்னை பெருங்குடி, எஸ்ஆா்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலங்கள் அமைக்க தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெருங்குடி சந்திப்பு மற்றும் எஸ்ஆா்பி டூல்ஸ் சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில், ரூ.113.80 கோடியில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, பாலத்தின் பணி 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓஎம்ஆா் சாலை பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள உயா்நிலை மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட செயல்பாட்டில் தேவைப்படும் ஒருங்கிணைப்பைக் கருத்தில் கொண்டு, மேம்பாலங்களைஅமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
பெருங்குடி சந்திப்பில் அமையவுள்ள மேம்பாலமானது, எம்.ஜி.ஆா். முக்கிய சாலையிலிருந்து சாய்வு பாதையைக் கொண்டிருக்கும். மேலும், எஸ்ஆா்.பி இணைப்பு வேளச்சேரி-தரமணி இணைப்புச் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தடையின்றி வலதுபுறம் திரும்புவதற்கு வழிவகுக்கும்.
மேம்பாலத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் அ.சித்திக் மற்றும் நிதி இயக்குநா் எஸ்.கிருஷ்ணமூா்த்திஆகியோா்முன்னிலையில், திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் தனியாா் நிறுவன உரிமையாளா் ராஜ்குமாா் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
தொடர்புடையது

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


